Friday, February 19, 2010
மனம் வேண்டும் நல்ல மனம் வேண்டும்
குழந்தைகள் போல் இருக்க வேண்டும் . எல்லா நிகழ்வுகளையும் கொண்டாடும் அவர்கள் மனம் நமக்கும் இருந்தால் நன்றாக இருக்கும். என் வீட்டுக்கு எதிர் வீட்டில் குடி இருக்கும் தட்சன்யா, அவள் வாங்கி வந்த புதிய கால் உரையை எல்லோருக்கும் மிகவும் குதூகலத்துடன் காட்டி மகிழ்ந்தாள். இதை பார்த்த நான் அவள் போன்ற ஒரு மனம் எனக்கும் வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அது இயலாது என்பது எனக்கு தெரிந்தது. நாம் இந்த உலகம் கற்று கொடுக்கும் பல உணர்வுகளyum, வேண்டா குணங்களையும் கற்று கொல்கிறோமோ என்று சில நேரங்களில் எண்ணம் ஏற்படுவதுண்டு. பொறாமை, கள்ளம், களவு இவை எல்லாமே இப்பொழுது வெற்றிக்கான தந்திரங்களாக மாறி விட்டன. நேர்மை என்பது முட்டாள்களின் வாதம் ஆகி விட்டது. பெருவாரியான மக்கள் இன்று தங்கள் காரியம் நிறைவேற என்ன வேண்டுமானாலும் செய்கிறார்கள். இந்த குணங்களை நாம் கற்று கொள்ளாமலேயே வாழ்ந்தால் இந்த உலகத்தில் நாம் எவ்வாறாக அடையாளபடுத்த படுவோம்?. இந்த உலகில் வெற்றியாளனாக இருக்க வேண்டும் என்பதே விதி. அதனால் பிறிதொருவருக்கு ஏற்படும் தீமைகள் குறித்து யாரும் சிந்தனை செய்வதில்லை. இன்று இந்தியாவில் இரண்டம் பரங்கியன் ஆட்சி துவங்கி விட்டது இது முன்னதை போல வெளிபடையாக இல்லாமல் மிகவும் மறைமுகமாகவும் , உள்நாட்டு கயவர்களாலும் திணிக்கபடுகிறது . மக்கள் விழித்து கொள்வார்களா. காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
Subscribe to:
Comments (Atom)
.jpg)