நான் தனியே அழைந்தேன்,
பேச ஒரு முகம் தேடி,
அணிந்துகொள்ள முகமூடி,
மனம் திறக்க ஒரு நாள்,
கனவுகளை பகிர ஒரு மனம்,
விதி என நினைவுகளை புறந்தள்ள,
இதுதான் உலக விதி என புரிந்து கொள்ள,
என் தேடல் தொடர்கிறது,
எதுவும் இல்லை,
என் மனம் மட்டுமே துணைக்கு,
என் நிழலோடு கை கோர்க்க நினைக்கிறேன்,
இரவு என்று ஒரு மாற்றம்,
கைகள் இன்றி இதோ ஓர் உலகம்,
என் கற்பனையில்,
என்னுடன் வரும் ஒரு கை,
எங்கேயும் எப்போதும்.
------------------------விஜய் கிருஷ்ணா ரா